வங்கதேசத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு... பொதுவிடுமுறை... இன்று பிற்பகல் கணவரின் கல்லறை அருகே கலீதா ஜியா உடல் நல்லடக்கம்!
வங்கதேச பாராளுமன்ற வளாகத்தில் தனது கணவரின் கல்லறை அருகே இன்று கலீதா ஜியாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் மற்றும் தேசியக் கட்சித் தலைவரான கலீதா ஜியா நீண்டநாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதிலும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கலீதா ஜியாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் வங்கதேச நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்றும், உடல் அவரது கணவர் மற்றும் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் கல்லறைக்கு அருகே அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச இடைக்கால ஆலோசகர் முஹம்மது யூனுஸ், கலீதா ஜியாவின் மறைவுக்காக தேசிய அளவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுமெனவும், நாளை வங்கதேசம் முழுவதும் பொது விடுமுறை அமையும் எனவும் தொலைக்காட்சியில் அறிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
