ஒரே நாளில் இயந்திரக்கோளாறால் 3 விமானங்கள் தாமதம்.. பயணிகள் கடும் அவதி!

 
ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்த‌து ஏர் இந்தியா விமானம்

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் எந்திரக்கோளாறு காரணமாக 3 விமானங்கள் தாமதம் ஆனதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து காலை 11.20 மணிக்கு ஏர்இந்தியா விமானம் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். 172 பேர் அதில் செல்ல இருந்தனர். இதற்காக டெல்லியில் இருந்து வந்த விமானத்தில் 172 பயணிகளும் ஏறி அமர்ந்தனர்.

விமானம்

விமானம் ஓடுபாதைக்கு ஓடத்தொடங்குவதற்கு முன்பு, விமானத்தின் எந்திரங்களை விமானி சரிபார்த்தார். அப்போது எந்திரக்கோளாறு ஏற்பட்டு உள்ளதை கண்டுபிடித்தார். இதனால் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. விமான என்ஜினீயர்கள் குழுவினர் எந்திரக்கோளாறை பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதனால் 172 பேரும் கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனர். நீண்டநேரமாக விமானம் புறப்படாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் கோஷமிட்டனர். அவர்களை சமரசம் செய்த அதிகாரிகள், பயணிகளுக்கு உணவு வழங்கினர். விமானத்தில் ஏற்ட்ட பழுது சரி செய்யப்பட்டு சுமார் 5 மணி நேரம் தாமதமாக மாலை 4.40 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் புறப்பட்டு சென்றது.

அதே போல் சிங்கப்பூரில் இருந்து காலை 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு காலை 11.40 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும்.

ஆனால் சிங்கப்பூரில் இருந்து 184 பயணிகளுடன் சென்னைக்கு வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் தாமதமாக வந்து சேரும் என அறிவிக்கப்பட்டது. பழுது சரி செய்த பிறகு சிங்கப்பூரில் இருந்து சுமார் 6 மணிநேரம் தாமதமாக மாலை 4.40 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து காலை 11.40 மணிக்கு மும்பைக்கு செல்ல காத்திருந்த 167 பயணிகளுடன் சுமார் 6 மணி நேரம் தாமதமாக மாலை 5.50 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டு சென்றது.

விமானம்

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சிங்கப்பூர், டெல்லி, மும்பை ஆகிய 3 ஏர் இந்தியா விமானங்கள் எந்திரக்கோளாறு காரணமாக பல மணி நேரம் தாமதம் ஆனதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web