சாரி... ப்பா... வீடியோ கேம் விளையாடிதை கண்டித்த பெற்றோர்... கடிதம் எழுதி 3 சிறுமிகள் 9 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
காசியாபாத் (உத்தரப்பிரதேச) பகுதியில் 12, 14 மற்றும் 16 வயது மூன்று சகோதரிகள் திடீரென தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அவர்கள் வீட்டு குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே குதித்தனர்; மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவர்கள் உயிரிழந்தனர். அவர்களின் அருகே “மன்னிக்கவும் அப்பா” என தொடங்கும் கடிதமும், டையரியும் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் விசாரணையில், சிறுமிகள் கொரியன் ஆன்லைன் கேமிங் செயலியில் அதிக ஈர்ப்புடன் ஈடுபட்டிருந்தனர், அதை விட்டு தப்ப முடியாமல் இருந்ததால் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. சில நாட்களாக அவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்ததும், செல்போன் பயன்படுத்துவதை தடை செய்ததும் மனநிலையை பாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்போது போலீசார் அனைத்து பதிவுகளையும், கேமிங் செயலியின் பயன்பாட்டையும் கணினி நிபுணர்கள் உதவியுடன் பரிசோதித்து வருகின்றனர். இந்த சம்பவம் சிறுவர்கள் மத்தியில் ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் டிஜிட்டல் பழக்கங்கள் ஏற்படுத்தும் மனஅழுத்தத்தை மீண்டும் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
