தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. உளவுத்துறை தலைமை இயக்குநர் உட்பட மாற்றம்!
Mar 15, 2026, 07:30 IST
உளவுத்துறை தலைமை இயக்குநர் உட்பட தமிழகத்தில் மூன்று காவல் துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி, காவல் துறையின் உளவுத்துறை தலைமை இயக்குநராக பால நாக தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கூடுதல் தலைமை இயக்குநர் பதவியில் இருந்து பதவி உயர்வு பெற்று தலைமை இயக்குநராக பொறுப்பேற்க உள்ளார்.

மேலும், பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமாருக்கு பொருளாதார பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் காவல் கண்காணிப்பாளர் ரூபேஷ் குமார் மீனா, குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
