அதிர்ச்சி... மேகவெடிப்பால் 3 பேர் பலி, 6 பேர் மாயம்!

 
மேகவெடிப்பு
 


 

உத்தரகண்ட் மாநிலத்தில்  பர்கோட்-யமுனோத்ரி சாலையில்  பாலிகர் பகுதியில்  மேக வெடிப்பு ஏற்பட்டது. அப்போது ஹோட்டல் கட்டுமான தளத்தில் இருந்த 20 தொழிலாளர்கள் அடித்துச் செல்லப்பட்டு அதில் 3 பேர் பலியாகினர்.  மீட்புக் குழுக்கள் இதுவரை 11 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டுள்ளது. மற்ற 6 பேர் இன்னும் காணவில்லை. மாநில பேரிடர் மீட்புப் படை இடிபாடுகளில் இருந்து ஒரு உடலை மீட்ட நிலையில் மேலும் 18 கிலோமீட்டர் தொலைவில் 2 உடல்களை போலீசார் மீட்டனர்.

எரிமலை வெடிப்பு

யமுனோத்ரி நெடுஞ்சாலையின் 10 மீட்டர் நீளம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.  இதனையடுத்து புனித யாத்திரைத் தலத்திற்கான இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சார் தாம் யாத்திரையை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.கர்வால் மண்டல ஆணையர் வினய் சங்கர் பாண்டே இதனை உறுதிப்படுத்தியுள்ளார் "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹரித்வார், ரிஷிகேஷ், ஸ்ரீநகர், ருத்ரபிரயாக், சோன்பிரயாக் மற்றும் விகாஸ்நகரில் யாத்ரீகர்களைத் தடுக்க காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்" எனக் கூறியுள்ளார்.  

மேக வெடிப்பு
உத்தரகண்டின் மலை மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் இடைவிடாத தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் ஆபத்தான அளவில் உயர்ந்துள்ளது. பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் பகுதிகள் வழியாகச் செல்லும் மந்தாகினி மற்றும் அலக்நந்தா ஆறுகள் தற்போது அபாய அளவைத் தாண்டி பாய்கின்றன.  ஆற்றங்கரைகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி  காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது