மரத்தில் கார் மோதி தம்பதி உட்பட 3 பேர் பலி... கோயிலுக்குச் சென்று திரும்பியபோது சோகம்!
சென்னை காரனோடை பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது, அவர்கள் பயணித்த கார் மரத்தில் பயங்கரமாக மோதியதில் தம்பதி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை காரனோடை பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (55), தனது குடும்பத்துடன் காரில் விழுப்புரம் அருகே உள்ள வளவனூரில் இருக்கும் குலதெய்வக் கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்றார். சாமி கும்பிட்டு விட்டு நேற்று மாலை அவர்கள் சென்னைக்குப் புறப்பட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

மயிலம், தென் பசியார் அருகே வந்தபோது, அவ்வழியாகச் சென்ற ஒரு மொபட் மீது கார் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதி நின்றது. இந்தக் கோர விபத்தில் காரில் பயணம் செய்த கோவிந்தராஜ், அவரது மனைவி திருப்பாவை, மருமகள் கல்பனா வள்ளி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், காரில் இருந்த வெங்கட்குமார், மிருதலாஸ்ரீ, சரவணன், பிருந்தா, அனன்யாஸ்ரீ ஆகியோரும், மொபட் ஓட்டி வந்த தென்களவாய் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (55) என்பவரும் படுகாயங்களுடன் திண்டிவனம் அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
