பரபரப்பு... பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி... 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
பூரி


 
 ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள ஜெகந்நாதர் கோவிலில் ரத யாத்திரை தொடங்கியுள்ளது. இந்த யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு  ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி இன்று பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டார்.  

பூரி ஜெகநாதர் ரத யாத்திரை! இவர்களுக்கு அனுமதி கிடையாது!

இன்று அதிகாலை குண்டிச்சா கோயில் அருகே ஜெகன்நாதர் தேர் வந்தபோது ஏற்பட்ட  நெரிசலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நெரிசலால் ஏற்பட்ட உயிர்ப்பலியை அடுத்து   ஒடிசா அரசு மிக கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி  பூரி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியை இடமாற்றம் செய்யப்பட்டனர்.  பணியில் அலட்சியமாக இருந்ததற்காக டிசிபி விஷ்ணு பதி மற்றும் கமாண்டன்ட் அஜய் பதி ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பூரி
 கூட்ட நெரிசலில் உயிரிழந்த பக்தர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார். மேலும், கூட்ட நெரிசல் ஏன் ஏற்பட்டது மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்த மேம்பாட்டு ஆணையரின் மேற்பார்வையில் விரிவான நிர்வாக விசாரணைக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.  தற்போது, பூரியில்  புதிய மாவட்ட ஆட்சியராக சஞ்சல் ராணாவும்,  புதிய எஸ்பியாக பினாக் மிஸ்ராவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது