மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி.... கோவில் தரிசனம் முடிந்து திரும்பிய போது சோகம்... !
திருவள்ளூர் மாவட்டம் காரமடையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விழுப்புரம் அருகே உள்ள மதுரவீரன் கோவிலில் தரிசனம் முடித்து காரில் திரும்பிய போது, திண்டிவனம் அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெங்கடேசன் (40), அவரது மனைவி கல்பனா, தாய் திருப்பாவை, தந்தை கோவிந்தராஜ், இரண்டு பெண் குழந்தைகள் மிதுலா ஸ்ரீ, ஹனன்யா ஸ்ரீ, அக்கா பிருந்தா மற்றும் மாமா சரவணன் என மொத்தம் ஒன்பது பேர் காரில் பயணம் செய்தனர்.


திண்டிவனம் அருகே தென்பசியார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது, முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரின் மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் வெங்கடேசன் திடீரென காரை திருப்பியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கல்பனா, திருப்பாவை மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த குழந்தைகள் மிதுலா ஸ்ரீ, ஹனன்யா ஸ்ரீ, பிருந்தா, சரவணன் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற தென்கலவாய் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் ஆகியோர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த மயிலம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பின்னர் சீரமைக்கப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
