நிலத்தகராறில் தந்தை, தாய், மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை!

 
மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

சொத்துக்காகப் பிறந்தவர்களே பகைவர்களாக மாறிய சம்பவம் ஒடிசாவில் மனித நேயமற்ற ஒரு கொடூரமான குற்றமாகப் பதிவாகியுள்ளது.

ஒடிசா மாநிலம், கினோஜ்கர் மாவட்டம், நிலிஜிஹரன் கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திர சோரன், அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேரும் நிலத்தகராறில் கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். 

கொலை

ஜிதேந்திர சோரனுக்கும் அவரது நெருங்கிய உறவினர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக ஒரு குறிப்பிட்ட நிலம் தொடர்பாகத் தகராறு நீடித்து வந்துள்ளது. இது குறித்துப் பலமுறை பஞ்சாயத்துக்கள் மற்றும் வாக்குவாதங்கள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் இந்தப் பிரச்சனை வெடித்தபோது, ஆத்திரமடைந்த உறவினர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் ஜிதேந்திர சோரன் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சரமாரியாக வெட்டினர். இதில் மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கினோஜ்கர் மாவட்ட போலீசார், உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலையில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியை போலீசார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்ற உறவினர்களைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!