கட்டிடம் திறந்து 3 மாசம் தான் ஆச்சு... பெயர்ந்து விழுந்த அங்காடிவாடி மேற்கூரை!
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை சுவர் பெயர்ந்து விழுந்தது. இச்சம்பவம் அங்கு வரும் மழலைகளின் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முன்னூர் மங்கலம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ரூ.15 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு 3 மாதங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கட்டிடம் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இன்று அந்த அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததாக தெரிகிறது. வழக்கமாக அங்கு குழந்தைகள் இருக்கும் சூழலில் இந்நிகழ்வின் போது அதிர்ஷ்டவசமாக அந்த அறையில் பள்ளிக்குழந்தைகள் யாரும் இல்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் குழந்தைகளின் பெற்றோர் கட்டிடம் கட்டி, 3 மாதங்கள் கூட முழுமை பெறவில்லை.
அதற்குள்ளாக புதிய கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கல்வித்துறையினர் உரிய விசாரணை நடத்தி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி கட்டிடத்தின் உறுதித்தன்மையை சோதனை செய்த பின்னரே குழந்தைகளை அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!