காதலியை ஏமாற்றி நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம்.. ப்ளஸ்-1 மாணவியின் காதலன் உட்பட 3 பேர் கைது!

 
குற்றம்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற செயல்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. காதலிப்பதாக ப்ளஸ்-1 படித்துக் கொண்டிருக்கும் மாணவியை ஏமாற்றி, தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காதலனையும், அவனது நண்பர்களையும் போக்சோவில் போலீசார் கைது செய்துள்ளது  மதுரை பெரும் பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளது. விபரீதம் தெரியாமல், தனது காதலன் அழைக்கிறான் என்று நம்பி சென்ற பின், தனது வாழ்க்கையை இழந்து நிற்கிறாள்.

பாலியல் வன்கொடுமை

மதுரையை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர், தனியார் பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி, அடிக்கடி வெளியே அழைத்து சென்றுள்ளார். பலமுறை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில், கீரைத்துறையில் உள்ள அக்கா வீட்டிற்குச் சென்றிருந்த மாணவியை ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு வருமாறு கார்த்திக் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே தனது நண்பர்களை வரவழைத்து காத்திருக்க சொல்லியிருக்கிறார். பின்னர், கார்த்திக், அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Gang rape

காதலன் என்று நினைத்து இத்தனை நாட்களாக பழகி வந்த மாணவிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பின்னர், இது குறித்து, மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் கார்த்திக் அவனது நண்பர்களான ஆதித்யா, ஹரிதாஸ் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web