கார் சாலையின் தடுப்புச்சுவரில் மோதி ஐஏஎஸ் அதிகாரி உட்பட 3 பேர் பலி!
கர்நாடக மாநில கனிம வளத்துறையின் நிர்வாக இயக்குனராக பணியாற்றிய மூத்த ஐஏஎஸ் அதிகாரி மகாந்தேஷ் பிலாகி, முன்னதாக பெங்களூரு மின்வாரியிலும் பொறுப்பில் இருந்தவர். நேற்று உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விஜயபுரத்திலிருந்து கலபுரகி நோக்கி காரில் பயணித்தார். அவருடன் உறவினர்கள் இருவரும் சென்றிருந்தனர்.
கலபுரகி மாவட்டம் கவுனஹில் பகுதியில் வந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. வேகமாக சென்ற காரு, சாலையின் நடுப்பகுதியில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி நொறுங்கியது. மோதி மீண்டும் சுழன்ற காரில் இருந்த மூவரும் படுகாயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரச் செய்தி கர்நாடக நிர்வாக அமைப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
