மேம்பாலத்தில் கோர விபத்து… இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் பலி!
நாமக்கல்–திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது. முன்னால் சென்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதியது. மோதிய வேகத்தில் சரக்கு வாகனம் சுழன்று திரும்பியது.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மீது அது நேரடியாக மோதியது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சரக்கு வாகன ஓட்டுநரும் பலத்த காயமடைந்தார்.

அவருக்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
