திருந்தவே மாட்டாங்க... தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது!

 
கள்ளச்சாராயம்
 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவத்தின் வலியும், வேதனையும் இன்னும் தீராத நிலையில் அடுத்த அதிர்ச்சியாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பித்துலுப்பட்டியில் தோட்டத்தில் கள்ளச்சாரயம் காய்ச்சிய 3 பேரை ஸ்ரீவில்லிபுத்தூர் மது விலக்கு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

உத்தரபிரதேச போலீஸ்

சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பித்துலுப்பட்டியில் உள்ள சண்முக கனி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இது குறித்து மதுவிலக்கு டி.எஸ்.பி சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்ட போது, கள்ளச்சாரயம் காய்ச்சியது தெரிய வந்தது. 

கள்ளச்சாராயம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய சாத்தூர் பகுதியைச் சேர்ந்த தோட்ட காவலாளி தங்கம் (59), பொன்பாண்டி, நாகராஜ் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 லிட்டர் கள்ளச்சாராயம், சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பாத்திரம், அடுப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் அணைக்கரைபட்டியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web