பள்ளி சென்ற 3 மாணவிகள் மாயம்... கதறித் துடிக்கும் பெற்றோர்... !

 
karur

இன்றைய பள்ளி செல்லும் மாணவ மாணவிகளிடம்  உள்ள அலட்சியப்போக்கு பெற்றோர்களையும், உறவினர்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. அவர்களின் அலட்சியம் பல நேரங்களில் விபரீதமாக அமைந்துவிடுகிறது. அதன்பிறகு என்ன செய்வதென தெரியாமல் வேறுவழியின்றி பெற்றோரிடம் தஞ்சம் புகுந்து விடுகின்றனர்.  அந்த வகையில் கரூர் மாவட்டம்   ராயனூர் பகுதியில் மாநகராட்சி அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வரும் 3 மாணவிகள் திடீரென மாயமாகியுள்ளனர். இவர்கள் மூவரும் இப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால், மாலை மூவரும் வீடு திரும்பாததால், அச்சமடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்தனர். அப்போது, அந்த மூன்று பேரும் பள்ளிக்கே வரவில்லை என்றது பள்ளி நிர்வாகம்.   

Govt School

கரூர் ராயனூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 3 மாணவிகள் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற 3 மாணவிகளும் மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அங்கு, பள்ளி முடிந்து வெளியேறியதாக சிறுமிகள் தெரிவித்தனர்.இதையடுத்து, மூன்று மாணவிகளின் சீருடை, பள்ளிக்கு அருகில் உள்ள கோவிலில் கழற்றி வைக்கப்பட்டது.

Police station

அருகில் இருந்தவர்களிடம் விசாரித்ததில், மாணவிகள் சீருடையை கழற்றிவிட்டு, மாற்று உடை அணிந்து கோவிலில் இருந்து பிறந்த நாள் என்று  கூறிவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார், மாணவிகள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்

From around the web