கொரியா கனவில் மூழ்கிய 3 சகோதரிகள்… ஆன்லைன் அடிமைத்தனம் சோகம்!

 
கொரியா
 

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் இந்திராபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 12, 14, 16 வயதுடைய மூன்று சகோதரிகள் பெற்றோருடன் வசித்து வந்தனர். இவர்கள் நீண்ட நாட்களாக ஒரு அறையில் தனிமையாக இருந்து, கொரிய மொழி கற்றல், கொரிய உணவு உண்ணுதல் மற்றும் கொரிய இசை, தொடர்கள் பார்ப்பதில் முழுமையாக ஈடுபட்டிருந்தனர். அவர்களின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்த பெற்றோர் கண்டித்து, அவர்களின் மொபைல் போன்களை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மூவரும், தங்களது குடியிருப்பில் இருந்து உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களின் அறையில் கிடைத்த குறிப்பில், இந்திய வாழ்க்கை முறை பிடிக்கவில்லை என்றும், தென்கொரியாவில் வாழ வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் எழுதப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் கொரிய மொழியில் கையெழுத்திட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்களின் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை ஆய்வு செய்ததில், சில ஆன்லைன் குழுக்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. அங்கு தவறான எண்ணங்களை தூண்டும் தகவல்கள் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. நிஜ வாழ்க்கையிலிருந்து விலகி இணைய உலகில் முழுமையாக மூழ்குவது ஆபத்தானது என்று மனநல நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!