கல்லூரி வாசலில் 3 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் காமராஜ் கல்லூரி மாணவர்களில் ஒருவர், கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், நீக்கப்பட்ட மாணவர் உட்பட 3பேர் கல்லூரி முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் நீக்கம் செய்துள்ள அந்த மாணவர் மற்றும் இந்திய மாணவர் சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் ஸ்ரீநாத், சந்தான செல்வம் ஆகிய 3பேர் கையில் பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,"கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக போராடியதால் நீக்கம் செய்துவிட்டு, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கல்லூரி நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். கல்லூரியில் கல்விக் கட்டணத்தில் ஊழல் நடக்கிறது. ஏழை, எளிய கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கல்விக் கட்டணம் குறித்து அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். பெருந்தலைவர் காமராஜரின் கனவையும், நோக்கத்தையும் சிதைக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டிக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
