சென்னையில் திடீர் அறிவிப்பு… 3 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து!
சென்னையில் இன்று 3 புறநகர் மின்சார ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தினசரி பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரயில் பயணிகள் மாற்று வசதிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு பகல் 12.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் இன்று இயக்கப்படவில்லை. ரயில் ரத்தால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
