கடற்கரையில் பிகினி உடையுடன் புதைக்கப்பட்ட 3 இளம்பெண்கள்... கொலையாளிகளை கண்டுபிடிக்க போலீசார் திணறல்!

 
யூலியானா மசியாஸ் யூலியானா மசியாஸ்

இது நிச்சயமாக கொலை தான் என்பது தெளிவாக தெரிகிறது. கொலையாளி 3 இளம்பெண்களையும் சித்திரவதை செய்திருக்கிறான். மரண பயத்தை அவர்களுக்கு காட்டி இருக்கிறான். தப்பி செல்ல முயன்றவர்கள், தங்களது இறப்பு குறித்து அறிந்து, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தகவல் தெரிவிக்க முயற்சி எடுத்திருக்கிறார்கள். ஆனாலும், கொலையாளியைப் பிடிக்க போலீசார் திணறி கொண்டிருக்கிறார்கள்.  தென் அமெரிக்காவின் ஈக்வடார் நாட்டில் உள்ள குயின்ண்டே அருகே எஸ்மரால்டாஸ் கடற்கரை மிகவும் பிரபலமானது. அங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வர். வெளிநாட்டினரும் அங்கு செல்ல ஆர்வம் காட்டுவர்.

இந்நிலையில் அங்குள்ள கடற்கரையின் ஒரு இடத்தில் சில நாட்கள் சுற்றி நின்று குரைத்துள்ளது. நாய்களை விரட்டினாலும் செல்லாத நிலையில் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால், மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  துர்நாற்றம் வந்த இடத்தை தோண்டி பார்த்தப் போது அங்கு 3 இளம்பெண்கள் கொன்று புதைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடற்கரையில் பிகினி உடையில் மூன்று இளம்பெண்களின் உடல்கள் கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

யூலியானா மசியாஸ்

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து பகீர் தகவல்கள் வெளிவந்தன. கொலை செய்யப்பட்டவர்கள் டொமிங்கோவைச் சேர்ந்த டெனிஸ் ரெய்னா(19), யூலியானா மசியாஸ்(21), நயேலி டாபியா (22) என்பது தெரிய வந்தது. மேலும் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இந்த 3 பேரில் இரண்டு பேர் தங்கள் குடும்பத்தினருக்கு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். 

டெனிஸ் தனது நண்பர் ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். அதில், ஏதோ நடக்கப் போகிறது என்று நான் உணர்கிறேன். எனக்கு ஏதாவது நடந்தால், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக் கொள் என கூறியுள்ளார்.  

யூலியானா மசியாஸ்

இதே போல் நான்கு வயது மகளைக் கொண்ட டாபியா தனது சகோதரிக்கு, தனது  இருப்பிடத்தை குறிப்பிட்டு வாட்ஸ்அப் செயலில் செய்தி அனுப்பியுள்ளார். அதில் சும்மா உனக்கு நான் தகவல் தெரிவித்துக்  கொள்வதற்காக அனுப்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த 3 பெண்களும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருந்தனர்.  பெண்கள் கடற்கரைக்கு கொண்டு வந்த ஆடைகள் மற்றொரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது கைகள் கட்டப்பட்டு, வாயும் மூடப்பட்டிருந்ததற்கான அடையாளங்களும் காணப்பட்டதாக உள்ளூர் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்த சம்பவம் ஈக்வடார் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறுஞ்செய்தி அனுப்பியதை வைத்து பார்த்தால் இந்த கொலைகள் ஏப்ரல் 4ம் தேதி நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. கொன்று புதைக்கப்பட்ட மூவரில் ஒருவர் கல்லூரி மாணவி, ஒருவர் பாடகி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!