சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்துச் சிதறியது - 3 தொழிலாளர்கள் உடல்சிதறி பலி!

 
விபத்து தொழிற்சாலை

பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகாவிற்கு உட்பட்ட மரகும்பி கிராமத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

நேற்று மாலை ஆலையில் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த ராட்சத பாய்லர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் சிக்கி அக்சய் தொபடே, தீபக் முன்னோலி மற்றும் சுதர்சன் பனோஷி ஆகிய மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

படுகாயமடைந்த 5 தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, பெலகாவியில் உள்ள கே.எல்.இ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராமராஜன் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். பாய்லரில் ஏற்பட்ட அதீத அழுத்தம் காரணமாக இந்த வெடிப்பு நிகழ்ந்ததா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து ஆலை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!