ரயில் நிலையத்தில் 3 வயது குழந்தை கடத்தல்... கதறித் துடித்த பெற்றோர்!
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த ரஞ்சன் (22) மற்றும் அவரது மனைவி முஸ்கான் (19) ஆகியோர் மூன்று குழந்தைகளுடன் பலூன் வியாபாரம் செய்து நாடு முழுவதும் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. கோட்டாறு சவேரியார் ஆலய திருவிழாவுக்காக குமரி மாவட்டம் வந்திருந்த அவர்கள், விழா முடிந்து நேற்று முன்தினம் மாலை நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஊருக்குச் செல்ல காத்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ரஞ்சனுடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், குழந்தை சாரா (3) அழுததை பார்த்து உணவு வாங்கி தருவதாக கூறி குழந்தையை தூக்கிச் சென்று விட்டார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக குழந்தை திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனே குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் நடத்தினர்.

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வில், அந்த ஆட்டோ ஓட்டுநர் குழந்தையுடன் செல்லும் காட்சி பதிவானது. விசாரணையில் கோட்டாறு பகுதியை சேர்ந்த யோகேஷ் குமார் (32) என்பவர் குழந்தையை கடத்தியது தெரிய வந்தது. அவரது செல்போன் சிக்னல் மூலம் இடம் கண்டறிந்து பார்வதிபுரம் அருகே உள்ள ஆலம்பாறை காட்டு பகுதியில் போலீசார் தேடுதல் மேற்கொண்டனர். புதருக்குள் பதுங்கியிருந்த யோகேஷ் குமாரை பிடித்து குழந்தையை மீட்டனர். குழந்தைக்கு எந்தவித பாலியல் துன்புறுத்தலும் நடக்கவில்லை என மருத்துவர்கள் உறுதி செய்த நிலையில், குற்றவாளி யோகேஷ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
