என்எல்சி தொழிலாளர்கள் 30 பேருக்கு வாந்தி மயக்கம்!! உணவில் எலி கிடந்ததால் விபரீதம்!!

 
எலி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி யிலிருந்து தமிழகம் மட்டுமல்ல கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களுக்கு கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன சுரங்கத்தில் தயாராகும் மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. 
இங்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அனல்மின் நிலையம்-I மற்றும் விரிவாக்கம், அனல்மின் நிலையம் - II மற்றும் விரிவாக்கம், என்.என்.டி.பி என 5 அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான இதில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 10000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

எலி
இரண்டாவது அனல்மின் நிலையத்தில் மட்டும் நாளொன்றுக்கு 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 7 யூனிட்டுகள் கொண்ட இந்தப் பிரிவில் சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் காலை ஷிஃப்டில் பணிபுரிந்து வந்தனர்.
அவர்களுக்கு தினமும் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் அங்கிருக்கும் கேன்டீனில் காலை உணவு வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  அதன்படி இன்று காலை எஸ்எம்இ, ஜிடபிள்யூசி பிரிவுகளில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு தயிர் சாதமும், இட்லியும் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஒரு சிலருக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

என்.எல்.சி
இதனையடுத்து , தயிர் சாதம் வைக்கப்பட்ட பாத்திரம் சோதனை செய்யப்பட்டது. அந்த பாத்திரத்தில் ஒரு எலி  இறந்துகிடந்தது தெரியவந்தது. அந்த உணவை சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம், என்.எல்.சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web