30 நாள் இடைக்கால போர்நிறுத்தம்.... டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாக்குறுதி!
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். 2022 பிப்ரவரியில் ரஷ்யா-உக்ரைன் இடையே தொடங்கிய போர், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரால் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
தற்போது, அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதாக கூறியிருந்தார்.

இதற்கு முன்னதாக, டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசியிருந்தார். அந்த உரையாடலில், போரை நிறுத்துவதற்கான சாத்தியங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டதாகவும், இரு தலைவர்களும் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து, ஜெலன்ஸ்கியுடனான தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த உரையாடலுக்கு முன்னதாக, மார்ச் 11ம் தேதி அன்று சௌதி அரேபியாவின் ஜெட்டாவில் உக்ரைன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. இது, அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு அடித்தளமாக அமைந்ததாக ஜெலன்ஸ்கி தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ரஷ்யா, உக்ரைன் அதிபருடனான தொலைபேசி உரையாடல் உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒரு திருப்புமுனையாக அமையலாம். டிரம்ப் முன்மொழிந்த 30 நாள் இடைக்கால போர் நிறுத்தத்தை உக்ரைன் ஏற்கத் தயாராக இருப்பதாகவும் ரஷ்யாவும் இதற்கு ஒப்புக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் உள்ளதாக கூறப்படுகிறது.
டிரம்ப், ரஷ்யாவுடனான தனது முந்தைய உரையாடலை அடிப்படையாகக் கொண்டு, போரை நிறுத்துவதற்கான சாத்தியமான திட்டங்களை ஜெலன்ஸ்கியுடன் விவாதித்துள்ளார். 30 நாள் இடைக்கால போர் நிறுத்தம் ஒரு முன்மொழிவை பரிசீலித்ததாகவும், அதை உக்ரைன் ஏற்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களுடனான ஜூம் அழைப்பில் பேசிய ஜெலென்ஸ்கி , “டிரம்பிடமிருந்து தனக்கு “எந்த அழுத்தமும் ஏற்படவில்லை” என்றும், இது ஒரு பயனுள்ள உரையாடல், ஒருவேளை நாங்கள் நடத்தியதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, மனநிலை நேர்மறையானது. எரிசக்தி மீதான போர் நிறுத்தம் பற்றி நாங்கள் பேசினோம், எனவே எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்கக்கூடாது. தெற்கு உக்ரைனில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட சபோரிஜியா அணுமின் நிலையத்தை உரிமையாக்குவதற்கான அமெரிக்க முன்மொழிவு குறித்து தானும் டிரம்பும் விவாதித்ததாகவும் கூறினார்.
டிரம்ப் தரப்பிலிருந்து, இந்த உரையாடல் “மிகவும் சிறப்பாக” அமைந்ததாகவும், சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் தனது “ட்ரூத் சோஷியல்” தளத்தில் பதிவிட்ட தகவலின்படி, புதினுடனான அவரது சமீபத்திய உரையாடலை அடிப்படையாகக் கொண்டு, ரஷ்யா மற்றும் உக்ரைன் தரப்புகளின் கோரிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார். “நாம் சரியான பாதையில் செல்கிறோம்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
