அட்ரா சக்க!! புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் லீவு!!

 
திருமண ஜோடி

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. எனினும் அந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை வளர்ச்சி கணிசமாக சரிவை சந்தித்து வருகிறது. கொரோனாவும்  வந்து அந்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது. இந்த சூழலில் மக்கள் தொகையில் சீனாவை தற்போது பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் செல்லும் வாய்ப்புள்ளதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக 1980ஆம் ஆண்டில் சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் தம்பதிகள் யாரும் குழந்தைகள் பெறக் கூடாது என சீனா சட்டம் இயற்றியது. இதனால் சீனாவில் தற்போது இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கட்டுபாடு காரணமாக மக்கள் தொகையில் சமம் இன்மை ஏற்பட்டுள்ளதால், இதனை சரிசெய்ய சீனா முனைப்புகாட்டி வருகிறது. அந்த வகையில் மீண்டும் மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் ஏதுவாக சட்ட திட்டங்களை சீனா அரசு 2015ஆம் ஆண்டுக்குபின் கொண்டுவரத் தொடங்கியது.

சீனா

குறிப்பாக சீன மக்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என 2021ஆம் ஆண்டில் சீனா சட்ட விதியை மாற்றியது. இந்நிலையில், சீனாவின் பல்வேறு மாகாணங்கள் திருமண விடுப்பு சார்ந்த விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளனர். முன்னதாக திருமணத்திற்கு 3 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை அளித்து வந்தன. இதை தற்போது சில மாகாணங்கள் 30 நாள்களாக அதிகரித்து சட்டம் இயற்றியுள்ளன.

சீனா

மக்கள் தொகை எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவே புதுமண தம்பதிக்கு ஒரு மாதம் சம்பளத்துடன் விடுப்பு வழங்க சீனா முடிவெடுத்துள்ளது. கன்சு, ஷான்சி போன்ற மாகாணங்கள் இந்த புதிய விதியை அமல்படுத்தியுள்ளன. ஷாங்காய் மாகாணம் 10 நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு வழங்க முடிவெடுத்துள்ளது. குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இதுபோன்ற பல திட்டங்களை சீனா தொடர்ந்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web