30 அடி உயரம்.. ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் பயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே பலியான கேமிராமேன்!

 
ஏ.ஆர்.ரகுமான்

30 அடி உயரத்தில் இருந்து கேமிராமேன் கீழே விழுந்ததில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்பட்டது சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சொந்தமான பிலிம் ஸ்டூடியோ கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டனமல்லி ஊராட்சி, ஐய்யர் கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக விஸ்தாரமாக இருக்கும் இந்த ஸ்டூடியோவில்  5க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்கியிருந்து  பணிபுரிந்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மானால நஷ்டம்! கூட்டம் வராததால் 3 கோடி கேட்டு வழக்கு!  நீதிமன்றம் அதிரடி!

இந்த ஸ்டூடியோவில் ”வெப்பம்” திரைப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பணியாளர்கள்  தொடர்ந்து  கடந்த 2 நாட்களாக ஓய்வின்றி நாள் முழுவதும் தங்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.  இந்த ஸ்டூடியோவில் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் 47 வயது குமார் என்பவர் கேமராமேனாக பணிபுரிந்து வருகிறார்.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில், நேற்று சினிமா படப்பிடிப்பின் போது 30 அடி உயரத்தில் இருந்து எதிர்பாராத விதமாக குமார் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்த மற்ற பணியாளர்கள் அவரை  108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்

From around the web