அதிர்ச்சி!! பரோட்டா சாப்பிட்ட 38 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

 
பரோட்டா

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில்  ஹோட்டலில்  ஜூன் 30ம் தேதி  இரவு பரோட்டா சாப்பிட்டதில் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு   உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்  அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு  தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

பரோட்டா

இது குறித்து கலெக்டர் விடுத்த செய்திக்குறிப்பில்  சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக கூறி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.சேந்தமங்கலம் கடைவீதி பகுதியில் இயங்கி வந்த தனியார் ஓட்டலில் விற்பனை செய்யப்பட்ட பரோட்டா, குருமாவை சாப்பிட்ட 38க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இவர்கள்  அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா சேந்தமங்கலத்திற்கு நேரில் சென்று, பரோட்டா விற்பனை செய்த உணவகத்தை ஆய்வு செய்தார்.  

அதில்   தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 6 கடைகளுக்கு தலா ரூ.2000 வீதம் ரூ.12,000/ அபராதம் விதிக்கப்பட்டது.   மேலும் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த  கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து கலெக்டர் விடுத்த செய்திக்குறிப்பில் சேந்தமங்கலம் கடைவீதியில் செயல்பட்டுவந்த  சுமதி மெஸ்ஸில்  விற்பனை செய்யப்பட்ட பரோட்டா, குருமா போன்ற உணவினை வாங்கி சாப்பிட்ட பச்சுடையாம்பட்டி புதூர் காலனி, குறவர் காலனி  பகுதியில் வசிப்பவர்கள் சாப்பிட்டுள்ளனர். இதனால்  38 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைகளில்   அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு பாதுகாப்பு தர சட்டத்தின்படி உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் சேந்தமங்கலம் கடைவீதி பகுதியில் இயங்கி வந்த சுமதி மெஸ் தனியார் உணவகம் தற்காலிகமாக, தடை செய்து உணவகத்திற்கு சீல் வைக்கபட்டுள்ளது. மேலும்  பாதிக்கப்பட்ட 18 பேருக்கு சிகிச்சை அளித்த, சேந்தமங்கலம் கடைவீதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை மருத்துவர்   மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உரிய தகவல் வழங்கவில்லை. இதனால் பொது சுகாதாரம் தொற்று நோய் சட்டத்தின்படி அந்த மருத்துவருக்கும்  நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.   

பரோட்டா சாப்பிட்டதால் கர்ப்பிணி பலி!! சோகத்தில் மூழ்கிய கிராமம்!!
மேலும், 30க்கும் மேற்பட்டவர்கள்  பரோட்டா சாப்பிட்டு சிகிச்சைக்கு வந்ததை மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு தெரிவிக்காததால் மருத்துவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை  கலெக்டர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்