300 ஆம்னி பேருந்துகள் ரத்து... தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்...!!

 
koyambedu bus stand ஆம்னி பஸ்

கடந்த 2 நாட்களாக கன்னியாகுமரி  நெல்லை, தூத்துக்குடி,   தென்காசி  மாவட்டங்களில்  வரலாறு காணாத பெருமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. கரையோர மக்கள் பாதுகாப்பான நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானங்கள் , ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  

தனியார் ஆம்னி பேருந்து கோயம்பேடு
இந்நிலையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி   மாவட்டங்களில் கனமழைபெய்து சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால்  பேருந்தை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  

ஆம்னி பேருந்து

இதனால் தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது. மழை, வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்குவது பாதுகாப்பு இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மழை வெள்ளம் குறைந்த பின் மீண்டும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களுக்கும் தினசரி 300 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது வெள்ளம் காரணமாக பயணிகள் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக பேருந்துகள் ரத்து செய்யப்படுகின்றன என அறிவித்துள்ளது.  

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web