300 தொண்டர்கள் கேப்டனுக்கு மொட்டை அடித்து ஈமச்சடங்கு .. மார்பளவு சிலை....!

 
மொட்டை

தமிழ் திரையுலகின் முண்ணனி நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் டிசம்பர் 28ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு அஞ்சலி செலுத்த திரையுலகமே திரண்டு வந்தது. வரலாறு காணாத கூட்டம் ரசிகர்கள் தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் தொடங்கி அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.  

கேப்டன்

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் தனியார் விடுதி வளாகத்தில்,  கேப்டன் விஜயகாந்த்துக்கு   மார்பளவு சிலை நிறுவப்படுகிறது. கேப்டன் விஜயகாந்த் சினிமா நடிகராக இருந்தபோது ஒகேனக்கலில் வைதேகி காத்திருந்தாள், கரிமேட்டு கருவாயன், சிறையில் பூத்த சின்ன மலர், செந்தூரப்பூவே, பெரிய மருது உட்பட ஒகேனக்கலில் 17 படங்களில் நடித்து உள்ளார். 

கேப்டன்


அதனை நினைவுபடுத்தும் வகையில்  இன்று ஒகேனக்கலில் தேமுதிக மாநில அவைத்தலைவர் இளங்கோவன் தலைமையில், கேப்டன் விஜயகாந்த்க்கு மார்பளவு சிலை நிறுவப்பட்டு திறப்பு விழா நடைபெற உள்ளது.  இந்நிகழ்வுக்கு முன் தேமுதிக சார்பாக 300 பேர் மொட்டை அடித்து கேப்டனுக்கு ஈமச்சடங்கு செய்தனர்.  மேலும் 3000 பேருக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web