ரூ3000/- பொங்கல் பரிசில் ரொக்கம்… ஜனவரி முதல் வாரத்தில் டோக்கன்...

 
பொங்கல்
 

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு வழங்கும் பணிகள் தயாராகி வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் 2021-ம் ஆண்டு ரூ.2,500 ரொக்கம் வழங்கப்பட்டது சாதனையாகப் பார்க்கப்பட்டது. திமுக ஆட்சியில் இதுவரை ரூ.1,000 மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரொக்கம் இல்லாதது விமர்சனங்களை எழுப்பியது.

பொங்கல் பரிசு தொகுப்பு

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்குவதால், பொங்கல் பரிசுடன் ரொக்கம் வழங்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.5,000 வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தாலும், மகளிர் உரிமைத் தொகை காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல்

இதற்கிடையே அமைச்சர் ஆர்.காந்தி, பொங்கல் பரிசு தொகுப்பு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். ஜனவரி 10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் வழங்கி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் டோக்கன் விநியோகம், இரண்டாம் வாரத்தில் பரிசு மற்றும் ரொக்கம் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!