10வது பாஸானவர்களுக்கு ரயில்வேயில் 32,438 வேலைவாய்ப்பு.. உடனே முந்துங்க... முழு விபரம்!

10ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 32,438 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை அமைப்பு இந்தியன் ரயில்வே துறை. இதில் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சம்பளத்துடன் சலுகைகளும் அதிகம் என்பதால் ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான ஊழியர்களின் கனவாக உள்ளது. இதற்காக நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு ரயில்வே வேலையை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என பல லட்சக்கணக்கான இரவும் பகலுமாக படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தேர்வர்கள் பெரிதும் எதிபார்த்து இருந்த ரயில்வே குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை மறுநாளுடன் முடிய இருந்த நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். இந்தியன் ரயில்வேயில் மொத்தம் 32,438 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
டிராபிக் பாயிண்ட்ஸ்மேன் பி - 5,058
என்ஜினியரிங் அஸிஸ்டண்ட் (டிராக் மிஷின்) - 799
டிராக் மெயிண்டர்ன் (குரூப் - 4)- 13,187
அஸிஸ்டண்ட் (P-Way) - 247
மெக்கானிக்கல் அஸிஸ்டன் (C&W) - 2,587
அஸிஸ்டண்ட் லோகோ (Diesel) - 420
அஸிஸ்டண்ட் (ஒர்க்-ஷாப் மெக்கானிக்கல்) - 3077
எலக்ட்ரிக்கல் அஸிஸ்டண்ட் டிஆர்டி - 1,381
அஸிஸ்டண்ட் லோகோ (எலக்ட்ரிக்கல்) - 950
அஸிஸ்டண்ட் ஆபரேஷன்ஸ் (எலக்ட்ரிக்கல்) - 744
கல்வித் தகுதி:
10 ம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது தேசிய அப்ரெண்ட்டீஸ் சான்றிதழ் வைத்து இருப்பவர்கள்
துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ படித்து இருக்க வேண்டும்.
வயது :
18 வயது முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள்
தேர்வு முறை:
4 கட்ட தேர்வு முறைகள் உள்ளன. கணிணி வழியிலான ஆன்லைன் தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.500 ஆகும். தேர்வு எழுதிய பிறகு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 இவர்களுக்கு தேர்வு எழுதி பிறகு முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : மார்ச் 3, 2025
திருத்தம் மேற்கொள்ள:
விண்ணப்ப படிவத்தில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 4 முதல் 13 ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே தேவையான சான்றிதழ்களை தயார் செய்து வைத்துக் கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!