கனமழை , பெருவெள்ளத்தால் தாய்லாந்தில் 33 பேர் பலி!

 
தாய்லாந்து
 

ஆசிய நாட்டான தாய்லாந்தில் பல நாட்களாக இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்ததால் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு பகுதியை சேர்ந்த சிங்கோரா உள்ளிட்ட 9 மாகாணங்கள் தண்ணீரில் மூழ்கி, ஆயிரக்கணக்கான வீடுகள் நீரால் சூழப்பட்டன. தெருக்கள் நதிகளாக மாறிய நிலையில், வாகன போக்குவரத்து மந்தமடைந்து பொதுப்பயணம் சாத்தியமில்லாமல் போனது.

வெள்ளநீர் வீடுகள், கடைகள், கிராமங்கள் அனைத்தையும் விழுங்கியதால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்தனர். தொடர்ச்சியான மழையில் மீட்பு குழுவினரும் ராணுவத்தினரும் உதவி பணியில் களம் இறங்கி ஆம்புலன்ஸ், படகு, ரெஸ்க்யூ வாகனங்கள் மூலமாக மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.

கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 33 பேர் பலியானதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. மழை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தாய்லாந்து முழுவதும் பதட்டம் நிலவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!