பொதுமக்களே உஷார்... இந்தியா முழுவதும் 3395 பேருக்கு கொரோனா...!
இந்தியாவில் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவ தொடங்கியுள்ளது. 2019ல் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனாவால் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதுபோல் பல கோடி பேர் அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கர்நாடகம், தமிழ்நாடு, மராட்டியம், கேரளா, தெலுங்கானா உட்பட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 3,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் நேற்று ஒரே நாளில் மட்டும் 685 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை எதிர்கொள்ள அனைத்து மாநிலங்களும் தயார் நிலையில் இருக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன், மருந்துகள் கையிருப்பு இருப்பதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
