இன்று முதல் 34,087 சிறப்புப் பேருந்துகள்...எந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்துகள் இயக்கம்? கிளம்பாக்கம் போகக் கூடாதவர்கள் யார் யார்?
இன்று ஜனவரி 10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் தொடர் விடுமுறை பொதுமக்களின் வசதிக்காக, 34,087 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊர் நோக்கி பலரும் ஒரே நேரத்தில் கிளம்புவார்கள் என்பதால், சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பயணிகளின் ஊர்களுக்கு ஏற்ப பேருந்து நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் தாங்கள் செல்லும் ஊரைப் பொறுத்துச் சரியான பேருந்து நிலையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
1. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் (KCBT):
தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்வோர் இங்குச் செல்ல வேண்டும்.
ஊர்கள்: திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கன்னியாகுமரி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், தஞ்சாவூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்.

2. கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையம் (கிளாம்பாக்கம் முனையத்திற்கு அருகிலேயே):
ஊர்கள்: வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும்.
3. கோயம்பேடு பேருந்து நிலையம் (CMBT):
கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாகச் செல்லும் பேருந்துகள், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.

4. மாதவரம் புதிய பேருந்து நிலையம்:
ஊர்கள்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் செல்வோருக்கான பேருந்துகள். மேலும், இங்கிருந்து வழக்கமான சில திருச்சி, சேலம், கும்பகோணம் பேருந்துகளும் இயக்கப்படும்.
இன்று ஜனவரி 10ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதி வரை மொத்தம் 34,087 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம் அல்லது TNSTC செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். வாட்ஸ்அப் எண்: 9444018898. கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் செல்ல 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் (MTC) இயக்கப்படும். பொதுப் புகார்கள்: 94450 14436 (24 மணி நேரம்), ஆம்னி பேருந்து அதிக கட்டணப் புகார்: 1800 425 6151 (கட்டணமில்லா எண்).
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
