அடுத்தடுத்து இறந்து கரைஒதுங்கிய 37 ஆமைகள் ... மீனவர்கள் அதிர்ச்சி!
சென்னை கடற்கரைகளில் அடுத்தடுத்து 37 ஆமைகள் உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் மீனவர்கள் மற்றும் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி நெம்மேலி குப்பம் கடற்கரையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் 20 ஆமைகள் உயிரிழந்த நிலையில் கிடந்தன. அதேபோல, ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியில் 8 ஆமைகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. 2 நாட்களுக்கு முன்பும் இதேபோன்று உயிரிழந்த ஆமைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போதும் கொத்து கொத்தாக ஆமைகள் இறந்திருப்பது விலங்குகள் நல ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெம்மேலிகுப்பம் பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் பணிகளுக்காக கட்டப்பட்டுள்ள தடுப்புகளால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சென்னையைச் சேர்ந்த வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி 'மீனவர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் வலைகளில் ஆமைகள் சிக்கி இதுபோன்று உயிரிழந்திருக்கலாம். ஆமைகள் பாதுகாப்பு குறித்து மீனவர்களிடையே வனத்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்', எனக் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!
