பண்டிகை ஸ்பெஷல்... 2 மாதங்களில் 374 முறை சிறப்பு ரயில்கள்!

 
பயணிகள் பயன்படுத்திக்கோங்க…!டிசம்பர் மாத சிறப்பு ரயில்கள்!!
 

பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களில் மொத்தம் 69 சிறப்பு ரயில்கள் 374 முறை இயக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் பயன் அடைந்துள்ளனர்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..

அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும், சபரிமலை யாத்திரை காலத்திலும் இந்த ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் பொங்கல் பண்டிகைக்காக 36 சிறப்பு ரயில்களும், சபரிமலை பக்தர்களுக்காக 33 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு இது பெரிதும் உதவியாக இருந்தது.

பொங்கல் ரயில்

சென்னையிலிருந்து திருச்சி, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், ராமேசுவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. வெளிமாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. மேலும் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த 29 சிறப்பு ரயில்களின் சேவை காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில்களின் விவரங்களை ஐஆர்சிடிசி மற்றும் தேசிய ரயில் விசாரணை இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!