தரப்பரிசோதனையில் அதிர்ச்சி ... பரிசோதித்த 754 விமானங்களில் 377-ல் கோளாறு !
நாடு முழுவதும் பரிசோதிக்கப்பட்ட விமானங்களில் பாதிக்குமேல் தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 3 வரை பரிசோதிக்கப்பட்ட 754 விமானங்களில் 377 விமானங்களில் கோளாறுகள் இருந்ததாக மக்களவையில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் விமான கோளாறுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அவர் கூறினார்.
2024-ம் ஆண்டில் மொத்தம் 421 தொழில்நுட்ப கோளாறுகள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டில் பதிவான 448 சம்பவங்களை விட குறைவாகும். விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தொடர்ந்து கண்காணிப்பு, திடீர் சோதனை மற்றும் ஒழுங்குமுறை தணிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விதிமுறைகள் மீறப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அனைத்து விமான நிறுவனங்களும் தங்களின் விமானங்களை முறையாக ஆய்வு செய்து வருகின்றன. விமான உபகரணங்கள் அவசர நிலை மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன. இதே காலகட்டத்தில் டிஜிசிஏ மொத்தம் 3,890 கண்காணிப்பு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
