3 வது முறை இரட்டை சதம்!! டேவிட் வார்னர் அசத்தல் சாதனை!!

 
டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியா  கிரிக்கெட் வீரர்களில்  முண்ணனியில் இருந்து வரும் அதிரடி  தொடக்க ஆட்டக்க்காரர் டேவிட் வார்னர். தற்போது ஆப்ரிக்க அணி ஆஸ்திரேலியாவில்  3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில் டிசம்பர் 17ம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில்   ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டேவிட் வார்னர்

2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் இதில்  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால்  பேட்டிங்கில் களம் இறங்கிய தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தற்போது   ஆஸ்திரேலிய அணி முதலாவது இன்னிங்சை ஆடி வருகிறது. தனது 100வது போட்டியில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் இரட்டை சதம் விளாசித் தள்ளியுள்ளார்.

ஐ.பி.எல். லில் 50 அரை சதங்கள் அடித்த டேவிட் வார்னர்!குவியும் பாராட்டுக்கள்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 3வது இரட்டை சதத்தை வார்னர் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  ஜோ ரூட்டுக்குப் பிறகு தனது 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் இதற்கு முன் 2021ல்  சென்னையில் இந்தியாவுக்கு எதிரான தனது 100வது டெஸ்ட் போட்டியிலும் இரட்டை சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web