நடன ஒத்திகையில் விஷப்பூச்சி கடி… 3-ம் வகுப்பு மாணவி பரிதாப பலி!

 
பூச்சிக்கடி
 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒத்திகையின் போது விஷப்பூச்சி கடித்ததால் 8 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட 87 கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்த ரக்.ஷிதா இந்த துயர சம்பவத்தில் பலியானார்.

ஆம்புலன்ஸ்

பள்ளி கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. அப்போது நடனமாடிக் கொண்டிருந்த மாணவியின் நெற்றியில் விஷப்பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. சில நொடிகளில் மாணவி மயங்கி கீழே விழுந்தார்.

உடனடியாக தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!