112 இந்தியர்களுடன் 3 வது அமெரிக்க விமானம் பஞ்சாபில் தரையிறங்கியது!

 
அமெரிக்க விமானம்


அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட சி17 குளோப்மாஸ்டர் விமானம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 16ம் தேதி இரவு 10 மணிக்கு 112 இந்தியர்களுடன் வந்த 3-வது விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்கியது.இந்த விமானத்தில் பஞ்சாபை சேர்ந்தவர்கள் 31 பேர், ஹரியானாவைச் சேர்ந்த 44 பேர், குஜராத்தை சேர்ந்தவர்கள் 33 பேர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இருவர், இமாச்சல் மற்றும் உத்தராகண்டிலிருந்து தலா ஒருவர் என மொத்தம் 112 பேர் இருந்தனர்.

அமெரிக்கா என்ஐஏ

 இவர்கள் குறித்த ஆவண சரிபார்ப்பு குறித்த  அனைத்து சோதனைகளும் முடிவடைந்த பிறகு அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. இதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.  முன்னதாக அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த 2 விமானங்களிலும் வந்தவர்களுக்கு கைகளில் விலங்கிடப்பட்டது சர்ச்சையானது.   3வது விமானத்தில் வந்தவர்களுக்கு கைகளில் விலங்கிடப்பட்டதா இல்லையா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், சட்டவிரோத குடியேறிகளை கைது செய்து ராணுவ விமானத்தில் அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அதன்படி 104 இந்தியர்கள் பிப்ரவரி 5ம் தேதி இந்தியா வந்தனர். அவர்களது கைகள் விலங்கிடப்பட்டு, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கால் விலங்குடன் இந்தியர்கள்


சட்டவிரோத குடியேறிகள் மனிதாபிமானமற்ற முறையில் அழைத்து வரப்பட்டதற்கு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. டெல்லியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. இதனால், இந்தியர்களை மனிதாபிமான முறையில் திருப்பி அனுப்ப, அமெரிக்காவிடம் இந்தியா வலியுறுத்தியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது விமானத்தில் வந்தவர்களுக்கும் கைகளில் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டதாக விமானத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web