தாய் புலியுடன் 4 குட்டி புலிகள் மர்ம மரணம்... வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

 
புலி
 


கர்நாடக மாநிலம் மலே மாதேஸ்வரா வனப்பகுதியில் தாய் புலியுடன் சேர்ந்து 4 குட்டிகளும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதைப் ரோந்து பணியின்‌ போது கண்டு வனத்துறை பணியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். புலிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், புலிகளின் எண்ணிக்கையை அதிகரித்து தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் ஒரே இடத்தில் 5 புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புலி

இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர்களுடன் சென்ற வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த 5 புலிகளின் உடல் பாகங்களை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.5 புலிகளின் இறப்புக்கான காரணம் குறித்து உயர்மட்ட அளவில் தனிக்குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 8 வயது மதிக்கத்தக்க பெண் புலி ஒன்று 4 குட்டிகளை ஈன்று பராமரித்து வந்த நிலையில், தாய் புலியும், அதன் 2 வயது மதிக்கத்தக்க 4 குட்டிகளும் அவ்வப்போது எங்களின் கண்களில் தென்படும். இவை அனைத்துமே நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தன. இந்நிலையில் திடீரென இவை அனைத்துமே மர்மமான முறையில் இறந்து கிடந்தன என்று வனத்துறை களப்பணியாளர்கள் தெரிவித்தனர். 

புலி

கால்நடையின் மாமிசத்தில் விஷம் வைத்து புலிகளைக் கொன்றிருக்கலாம் என்கிற அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பின்னரே புலிகளின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது