4 நாட்கள் 3 நாடுகள்... இன்று பிரதமர் மோடி ஜோர்டான் பயணம்!

 
மோடி வெளிநாடு
 

பிரதமர் நரேந்திர மோடி தனது நான்கு நாள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக இன்று (டிச. 15) ஜோர்டானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் ஜோர்டான் புறப்பட்டுச் சென்ற பிரதமர், அங்கு அந்நாட்டு மன்னர் 2-ஆம் அப்துல்லா பின் அல் ஹுசைனைச் சந்திக்க உள்ளார்.

மோடி வெளிநாடு

இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு, நாளை (டிச. 16) பிரதமர் மோடி எத்தியோப்பியாவுக்குப் புறப்படுகிறார். இது பிரதமர் மோடி எத்தியோப்பியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் ஆகும். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க இருக்கிறார்.

மோடி ட்ரோன்

இதனைத் தொடர்ந்து, ஓமன் நாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு மன்னர் ஹைதம் பின் தாரிக்கைச் சந்தித்துப் பேச உள்ளார். இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் முதலீடுகள் தொடர்பான பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் இந்தப் பயணம் வெளியுறவுத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!