ஹெல்மெட்டுக்குள் 4 அடி நல்ல பாம்பு... வாகன ஓட்டிகளே உஷார்!
கோவையில் ஹெல்மெட்டுக்குள் நல்ல பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொடிசியா அருகே உள்ள லூலு மால் வேர்ஹாவுஸ் பார்க்கிங்கில் புல்லட் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனத்தின் பக்கவாட்டில் ஹெல்மெட் தொங்கவிடப்பட்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் வந்த 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஹெல்மெட்டுக்குள் புகுந்துள்ளது.

இருசக்கர வாகன உரிமையாளர் சங்கர் திடீரென ஹெல்மெட்டை பார்த்தபோது உள்ளே பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாம்பு பிடிக்கும் வீரருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவர் லாவகமாக பாம்பை பிடித்தார். பின்னர் அந்த நல்ல பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவையில் காலை நேரங்களில் குளிர் அதிகமாக இருப்பதால் மிதமான வெப்பத்தைத் தேடி பாம்புகள் இதுபோல் வருவதாக வனத்துறை தெரிவித்தது. ஹெல்மெட், காலணிகள் போன்றவற்றை பயன்படுத்தும் முன் கவனமாக சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
