பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து தாக்குதல்; 4 இந்திய மாணவர்கள் படுகாயம்!

 
ரஷ்யா
 

ரஷ்யாவின் உஃபா நகரில் உள்ள மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் விடுதியில் நடந்த தாக்குதலில் 4 இந்திய மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பாஷ்கோர்டோஸ்தான் குடியரசில் உள்ள பல்கலைக்கழக விளையாட்டு அரங்கிற்குள் நுழைந்த 2 பேர் மாணவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய போலீசார் முயன்றபோது ஏற்பட்ட மோதலில் 2 காவலர்கள் காயமடைந்தனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் தாங்களே தங்களை காயப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவரான 15 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டு, காயமடைந்த இந்திய மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!