ஹெலிகாப்டர் மலையில் மோதி 4 பேர் பலி!

 
ஹெலிகாப்டர்

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் 4 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி கோர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பாக அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பு கருதி, விபத்து நடந்த பகுதி வழியாக விமான போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் பைலட்டைத் தவிர, மற்ற மூவரும் 30 வயதுக்குட்பட்ட பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த மாநில ஷெரிப், அவர்களுக்கு மனத் தைரியம் அளிக்க இறைவனை வேண்டுவதாக கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!