ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல் - 4 பேர் பலி!
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் நேற்று பாகிஸ்தான் படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 4 ஆப்கானியர்கள் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துவா மாகாணத்தில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்புக்குப் பக்கத்து நாட்டில் உள்ள தலிபான்கள் ஆதரவு அளிப்பதாகப் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த பயங்கரவாதிகளை ஒழிப்பதாகக் கூறி ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த மோதல் இருநாடுகளின் உறவிலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் நேற்று பாகிஸ்தான் படையினர் திடீரெனத் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இந்தப் பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
