தொடரும் சோகம்... சிறிய ரக விமானம் விழுந்து 4 பேர் பலி!

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கொலமா மாவட்டத்தில் சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 4 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் திடீரென எஞ்சின் கோளாறு ஏற்பட்டது.
இதனால், விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. இதனால், விமானத்தில் தீ பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 4 பேரும் உடல் கருகி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் , உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!