தீராத கடன் தொல்லை... மருத்துவர் , வழக்கறிஞர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை!

தமிழகத்தில் சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் சென்னை முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருமங்கலத்தில் 2 குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் அவர்கள் 4 பேரும் திடீரென தற்கொலை செய்துகொண்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருமங்கலத்தில் வசித்து வரும் மருத்துவர் பாலமுருகன். இவரது மனைவி உயர்நீதிமன்ற வழக்குறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுமதி, மகன்கள் இரண்டும் பேருடன் தற்கொலை செய்து கொண்டனர். ரூ.5 கோடி கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!