வானில் ஒரே நேரத்தில் 4 நிலவுகள்? ரஷியாவில் நிகழ்ந்த அரிய காட்சி... வைரல் வீடியோ!
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வானில் ஒரே நேரத்தில் 4 நிலவுகள் தென்பட்டது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த காட்சியை பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கவனம் ஈர்த்தன.
பொதுவாக பூமிக்கு ஒரு நிலவு மட்டுமே உள்ள நிலையில், ஒரே நகரில் 4 நிலவுகள் தோன்றியது எப்படி என்ற கேள்வி எழுந்தது. இதற்கு வானிலை ஆர்வலர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இது உண்மையான நிலவுகள் அல்ல என்றும், இது ஒளி மாயத்தோற்றம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வை ‘பாரசெலீன்’ அல்லது ‘மூன் டாக்’ என்று அழைக்கப்படுகிறது. பூமியில் இருந்து 20,000 அடி உயரத்திற்கு மேல் உருவாகும் சிரஸ் மேகங்களில் உள்ள பனிக்கட்டிகளின் வழியாக நிலவின் ஒளி ஊடுருவும்போது, ஒளி விலகலால் இப்படிப்பட்ட போலி நிலவுகள் தோன்றும் என வானிலை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
