பெரும் சோகம்... காரும், சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி 4 பேர் துடிதுடித்து பலி!

 
கார் சரக்கு ஆட்டோ

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் காவிரி நகரில் வசித்து வருபவர் 65 வயது செந்தமிழ்ச்செல்வன்.   இவர், மனைவி அருணா,   மருமகள் ரம்யா, பேரக் குழந்தைகள் குழலினி(10), மகிழினி(4) இவர்களுடன்  நேற்று காரைக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை செந்தமிழ்ச்செல்வன் ஓட்டினார்.
திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது கார் மோதியது.

ஆம்புலன்ஸ்

இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. தகவல் அறிந்து வந்த நமணசமுத்திரம் போலீஸார் மற்றும் திருமயம் தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், செந்தமிழ்ச்செல்வன், அருணா, லோடு ஆட்டோவில் பயணித்த இலுப்பூர் பின்னங்குடியில் வசித்து வரும்  சுதாகர்(45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச போலீஸ்

மேலும், ரம்யா, குழலினி, மகிழினி, லோடு ஆட்டோ ஓட்டுர் திருக்கோகர்ணம் மூர்த்தி(45) ஆகியோர் படுகாயங்களுடன், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ரம்யா  உயிரிழந்தார்.
காரைக்குடியில் இருந்து வந்த மற்றொரு கார், ஏற்கனவே விபத்துக்குள்ளாகி இருந்த இந்த வாகனங்கள் மீது மோதியது. இருப்பினும், அந்தக் காரில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த விபத்து குறித்து  போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web