வியாபாரியைத் தாக்கி மிரட்டல்... 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது!

 
பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பழ வியாபாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் 3ஆவது தெருவைச் சேர்ந்த சேர்மதுரை மகன் மாரித்துரை (33). கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் மாநில வணிகவரி அலுவலகம் அருகே பழ வியாபாரம் செய்துவரும் இவருக்கும், வீரவாஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் ஜெயராஜ் (62) என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாம்.

இளம் நடிகர் கைது

சம்பவத்தன்று ஜெயராஜ் உள்ளிட்ட 5 பேர் மாரித்துரையை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து ஜெயராஜ், மனைவி மல்லிகா (55), கயத்தாறு ஜே.ஜே. நகரை சேர்ந்த தங்கத்துரை மகன் சந்தனசெல்வம் (25), தங்கத்துரை மனைவி ஆரோக்கியமேரி (45) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?